< Back
தேசிய செய்திகள்
எஸ்.ஐ. தேர்வு முறைகேடு: போலீஸ் அதிகாரி கைது
தேசிய செய்திகள்

எஸ்.ஐ. தேர்வு முறைகேடு: போலீஸ் அதிகாரி கைது

தினத்தந்தி
|
14 July 2022 9:55 PM GMT

எஸ்.ஐ. தேர்வு முறைகேட்டில் போலீஸ் அதிகாரி கைது செய்யப்பட்டார்.

பெங்களூரு:

கர்நாடகத்தில் 545 சப்-இன்ஸ்பெக்டர் பணிகளுக்கான தேர்வில் முறைகேடு நடந்திருப்பது குறித்து சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் கூடுதல் டி.ஜி.பி. அம்ருத் பால் உள்பட பல போலீஸ்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இநத நிலையில், சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேடு தொடர்பாக பெங்களூரு புறநகர் மாவட்டம் அனுகொண்டனஹள்ளி போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வரும் மனோஜ் கைது செய்யப்பட்டுள்ளார். இவர், சப்-இன்ஸ்பெக்டர் தோ்வு எழுதிய 2 போலீஸ்காரர்களிடம் இருந்து பணம் பெற்றதாக கூறப்படுகிறது. அதாவது போலீஸ்காரர்களான ஹரீஷ் மற்றும் சோமநாத் ஆகிய 2 பேரிடம் ரூ.1 கோடிக்கு பேரம் பேசியதாகவும், பின்னர் தலா ரூ.50 லட்சத்தை மனோஜ் பெற்றதாகவும் கூறப்படுகிறது.

அந்த ரூ.1 கோடியில் ரூ.60 லட்சத்தை போலீஸ் ஆள்சேர்ப்பு பிரிவு உயர் போலீஸ் அதிகாரிகளிடம் மனோஜ் கொடுத்துவிட்டு, மீதி ரூ.40 லட்சத்தை கமிஷனான மனோஜ் வைத்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. இதற்கான ஆதாரங்கள் சி.ஐ.டி. போலீசாருக்கு கிடைத்ததை தொடர்ந்து, சப்-இன்ஸ்பெக்டர் மனோஜ் கைது செய்யப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து, கைதான மனோஜை கோர்ட்டில் ஆஜர்படுத்திவிட்டு காவலில் எடுத்து சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்