< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
ஷ்ரத்தா கொலை வழக்கு - ஆப்தாப்-க்கு 5 நாட்கள் போலீஸ் காவல்
|17 Nov 2022 6:59 PM IST
ஷ்ரத்தா கொலை வழக்கில் ஆப்தாப்-க்கு 5 நாட்கள் போலீஸ் காவல் நீட்டித்து டெல்லி சாகேத் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது.
புதுடெல்லி,
சமீபத்தில் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்திய கொலை சம்பவம் என்றால் அது புது டில்லியில் ஷ்ரத்தா வாக்கர் எனும் இளம் பெண் தனது காதலன் அஃப்தாப்பால் கொல்லப்பட்ட சம்பவம் தான். அதுவும் இந்த கொலை சம்பவம் மே மாதம் நிகழ்ந்துள்ளது என்பதுவும், ஷ்ரத்தா உடலை 35 துண்டுகளாக வெட்டியதும் இப்போது நினைத்தாலும் கொலை நடுங்க வைத்துளளது.
இந்தநிலையில், காதலி ஷ்ரத்தாவை கொலை செய்ததாக கைது செய்யப்பட்ட அஃப்தாப்பின் உண்மை அறியும் சோதனை முடிவு நீதிமன்றத்தில் அளிக்கப்பட்டது. அப்தாப்பிடம் மேலும் விசாரணை நடத்தப்பட வேண்டி உள்ளதால் டெல்லி போலீஸ் மனு அளித்தது. டெல்லி போலீசின் மனுவை ஏற்று அப்தாப்பின் காவலை மேலும் 5 நாட்களுக்கு நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.