< Back
தேசிய செய்திகள்
தப்பி ஓட முயன்ற கைதியை துப்பாக்கியால் சுட்டு பிடித்த போலீசார்
தேசிய செய்திகள்

தப்பி ஓட முயன்ற கைதியை துப்பாக்கியால் சுட்டு பிடித்த போலீசார்

தினத்தந்தி
|
22 Aug 2022 9:49 PM IST

மங்களூரு அருகே தப்பி ஓட முயன்ற கைதியை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த சம்பவம் நடந்துள்ளது.

மங்களூரு:

தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு அருகே அடையாறு பகுதியைச் சேர்ந்தவர் முஸ்தாக்(வயது 26). இவர் கடந்த 19-ந் தேதி அடிதடி வழக்கு தொடர்பாக மங்களூரு புறநகர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். நேற்று அவரை போலீசார் விசாரணைக்காக அழைத்து சென்றபோது, போலீசாரின் பிடியில் இருந்து முஸ்தாக் தப்பி ஓட முயன்றார். அப்போது போலீசார் துப்பாக்கியால் அவரது காலில் சுட்டனர்.

இதில் தோட்டாக்கள் அவரது காலை துளைத்தது. இதில் காயம் அடைந்து சுருண்டு விழுந்த முஸ்தாக்கை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். தப்பி ஓடும்போது முஸ்தாக், ஒரு போலீஸ்காரரை தாக்கி இருந்தார். அந்த போலீஸ்காரரும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுபற்றி மங்களூரு புறநகர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறார்கள்.

மேலும் செய்திகள்