< Back
தேசிய செய்திகள்
இனி வரும் அனைத்து தேர்தல்களிலும் சிவசேனாவும், பா.ஜ.க.வும் இணைந்து போட்டியிடும் - ஏக்நாத் ஷிண்டே
தேசிய செய்திகள்

இனி வரும் அனைத்து தேர்தல்களிலும் சிவசேனாவும், பா.ஜ.க.வும் இணைந்து போட்டியிடும் - ஏக்நாத் ஷிண்டே

தினத்தந்தி
|
5 Jun 2023 4:34 PM IST

இனி வரும் அனைத்து தேர்தல்களிலும் சிவசேனாவும், பா.ஜ.க.வும் இணைந்து போட்டியிடும் என மராட்டிய முதல் மந்திரி ஏக்நாத் ஷிண்டே கூறி உள்ளார்.

புதுடெல்லி

மராட்டிய மாநிலத்தில் பா.ஜ.க. ஆதரவுடன் ஏக்நாத் ஷிண்டே ஆட்சி நடத்தி வருகிறார்.இந்த நிலையில் மத்திய உள்துறை மந்திரி அமித் ஷாவை ஷிண்டே மற்றும் பட்னாவிஸ் ஆகியோரை நேற்று மாலை டெல்லியில் சந்தித்து பேசினர்.

அமித்ஷாவுடனான சந்திப்பின் போது விவசாயம் மற்றும் ஒத்துழைப்பு தொடர்பான பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டதாக ஏக்நாத் ஷிண்டே கூறினார்.

இதுகுறித்து ஷிண்டேவெளியிட்டு உள்ள டுவிட்டில் கூறி இருப்பதாவது:-

"நானும் துணை முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிசும் நேற்று டெல்லியில் மத்திய உள்துறை மந்திரி அமித் ஷாவை சந்தித்தோம், இது ஒரு மகிழ்ச்சியான சந்திப்பு. கூட்டத்தில், அனைத்து எதிர்கால தேர்தல்களிலும் (லோக்சபா, சட்டசபை மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் உட்பட) கூட்டாக போட்டியிடுவது என்று முடிவு செய்யப்பட்டது. சிவசேனா மற்றும் பா.ஜ.க. நாங்கள் தேர்தலில் போட்டியிட்டு பெரும்பான்மையுடன் வெற்றி பெறுவோம்" என்று ஏக்நாத் ஷிண்டே அமித் ஷாவுடனான சந்திப்பின் புகைப்படத்துடன் டுவீட் செய்துள்ளார்.

மராட்டிய


மேலும் செய்திகள்