< Back
தேசிய செய்திகள்
ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு சிரோமணி அகாலி தளம் கட்சி ஆதரவு!
தேசிய செய்திகள்

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு சிரோமணி அகாலி தளம் கட்சி ஆதரவு!

தினத்தந்தி
|
1 Sept 2023 9:55 PM IST

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு சிரோமணி அகாலி தளம் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

நாட்டில் 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் மத்திய அரசு சிறப்புக்குழு ஒன்றை அமைத்து உத்தரவிட்டுள்ளது. நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல், மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தலை ஒரே நேரத்தில் நடத்த சாத்தியம் உள்ளதா என்பது குறித்து இந்த சிறப்புக்குழு ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்திற்கு அரசியல் கட்சிகள் ஆதரவையும் எதிர்ப்பையும் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், மத்திய அரசின் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு சிரோன்மணி அகாலி தளம் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது. இது குறித்து அக்கட்சியின் தலைவர் சுக்பீர் சிங் பாதல் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் "ஒரே நாடு ஒரே தேர்தல் கொள்கைக்கு நானும் எனது கட்சியும் (சிரோமணி அகாலிதளம்) வரவேற்று ஆதரிக்கிறது. இந்த விவகாரத்தில் நாடு முழுவதும் ஒருமித்த கருத்து இருக்க வேண்டும். மக்களவை, மாநில சட்டப்பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும். இதனால் வீண் செலவினங்களைக் கட்டுப்படுத்துவதோடு தேவையான ஸ்திரமின்மையையும் வழங்கும்" என்று தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்