மக்களவை உறுப்பினராக பதவியேற்றார் சத்ருகன் சின்ஹா
|நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்ற சத்ருகன் சின்ஹா மக்களவை உறுப்பினராக பதவியேற்றார்.
டெல்லி,
543 இடங்களை கொண்ட நாடாளுமன்ற மக்களவைக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இதில் பாஜக தலைமையிலான கூட்டணி அபார வெற்றிபெற்று தொடர்ந்து 3வது முறையாக ஆட்சியமைத்தது.
இதனிடையே, நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்ற எம்.பி.கள் மக்களவை உறுப்பினர்களாக பதவியேற்றுக்கொண்டனர். ஆனால், ஒருசில காரணங்களுக்காக சில எம்.பி.க்கள் கால தாமதமாக பதவியேற்றுக்கொண்டுள்ளனர்.
இந்நிலையில், நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்ற திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. சத்ருகன் சின்ஹா மக்களவை உறுப்பினராக இன்று பதவியேற்றுக்கொண்டார். ஏற்கனவே 541 எம்.பி.க்கள் மக்களவை உறுப்பினர்களாக பதவியேற்றுக்கொண்ட நிலையில் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்ற எம்.பி.க்களில் கடைசி நபராக இன்று சத்ருகன் சின்ஹா மக்களவை உறுப்பினராக பதவியேற்றுக்கொண்டார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி நாடாளுமன்ற தேர்தலில் வயநாடு, ரேபரேலி ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். ஆனால், அவர் வயநாடு தொகுதி எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் நாடாளுமன்றத்தில் எம்.பி.க்களின் உறுப்பினர்களின் எண்ணிக்கை 542 ஆக உள்ளது.