< Back
தேசிய செய்திகள்
இந்திய சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தார் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரி
தேசிய செய்திகள்

இந்திய சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தார் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரி

தினத்தந்தி
|
16 Aug 2023 1:58 AM IST

3,800 கி.மீ. பாதயாத்திரையை நிறைவு செய்து ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரி இந்திய சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தார்.

ஐதராபாத்,

ஆந்திர முதல்-மந்திரி ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரி ஒய்.எஸ்ஆர்.சர்மிளா, 'ஒய்.எஸ்.ஆர். தெலங்கானா' என்ற அரசியல் கட்சியை உருவாக்கி, தெலங்கானா அரசியலில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

மாநிலத்தில் தனக்கான ஆதரவை திரட்ட கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 20-ந்தேதி ஐதராபாத்தின் புறநகரான செவெல்லாவில் இருந்து பாதயாத்திரையை தொடங்கினார் சர்மிளா.

மாநிலத்தின் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதி வாரியாக பாதயாத்திரையை மேற்கொண்டார். இந்த பாதயாத்திரையின் போது சர்மிளா 2 முறை கைது செய்யப்பட்டார். மேலும் பாதயாத்திரையை தொடர முடியாத அளவுக்கு பல்வேறு பிரச்சினைகளை சந்தித்தார்.

இருப்பினும் அவர் பல துன்பங்களை கடந்து சுமார் 1½ ஆண்டு காலத்தில் 3,800 கி.மீ. பயணித்து தனது பாதயாத்திரையை நிறைவு செய்தார்.

இந்த நிலையில் ஒரு பெண்ணாக இருந்து குறிப்பிடத்தக்க இந்த சாதனையை செய்ததை அங்கீகரிக்கும் வகையில் இந்திய சாதனை புத்தகத்தில் சர்மிளாவின் பெயர் நேற்று சேர்க்கப்பட்டது. இதுதொடர்பாக இந்திய சாதனை புத்தகத்தின் பிரதிநிதிகள் சர்மிளாவுக்கு தங்களது வாழ்த்துகளை தெரிவத்துள்ளனர்.

மேலும் செய்திகள்