< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
ஏற்றத்துடன் தொடங்கிய இந்திய பங்குசந்தை...!
|23 May 2022 10:09 AM IST
சென்செக்ஸ் 310.91 புள்ளிகள் உயர்ந்து 54,637.30ல் வர்த்தகம் ஆகிறது.
மும்பை,
உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் தாக்குதலை கண்டித்து ரஷியா மீது பல்வேறு நாடுகள் கடும் பொருளாதார தடைகளை விதித்து வருகின்றன. இதனால் இந்தியாவில் கடந்த சில நாள்களாக பங்குசந்தை ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது.
இந்த நிலையில் இன்று இந்தியாவில் பங்கு சந்தை புள்ளிகள் அதிகரித்து ஏற்றத்துடன் வர்த்தமாகி வருகிறது. அதன்படி,
சென்செக்ஸ் 310.91 புள்ளிகள் உயர்ந்து 54,637.30ல் வர்த்தகம் ஆகிறது. நிஃப்டி 83.35 புள்ளிகள் உயர்ந்து 16,349.50ல் வர்த்தகம் ஆகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 4 காசுகள் உயர்ந்து ரூ.77.66ல் வர்த்தகம் வர்த்தகமாகிறது.