< Back
தேசிய செய்திகள்
பெண்ணுக்கு பாலியல் தொல்லை  தனியார் நிறுவன ஊழியருக்கு வலைவீச்சு
தேசிய செய்திகள்

பெண்ணுக்கு பாலியல் தொல்லை தனியார் நிறுவன ஊழியருக்கு வலைவீச்சு

தினத்தந்தி
|
23 Sept 2023 12:15 AM IST

பண்ட்வாலில் வீட்டில் தூங்கி கொண்டிருந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தனியார் நிறுவன ஊழியரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

மங்களூரு-

பண்ட்வாலில் வீட்டில் தூங்கி கொண்டிருந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தனியார் நிறுவன ஊழியரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

தனியார் நிறுவன ஊழியர்

தட்சிண கன்னடா மாவட்டம் பண்ட்வால் தாலுகா பால்திலா பகுதியை சேர்ந்தவர் விஸ்வநாத் (வயது35). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு பணிமுடிந்து விஸ்வநாத் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அதேப்பகுதியை சேர்ந்த இளம்பெண்ணின் வீட்டிற்குள் அவர் நுழைந்தார்.

அங்கு, இளம்பெண் தனது தங்கையுடன் தூங்கி கொண்டிருந்தார். இந்தநிலையில் ஜன்னல் கதவை விஸ்வநாத் திறந்து உள்ளார். பின்னர் அவர் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அப்போது திடீரென இளம்பெண், அவரது தங்கையும் விழித்்தனர்.

சத்தம் போட்டனர்

விஸ்வநாத்தை பார்த்த அவர்கள் 2 பேரும் சத்தம் போட்டனர். அவர்களின் அலறல் சத்தம் கேட்டு பெற்றோர் ஓடி வந்தனர். அப்போது விஸ்வநாத் ஜன்னல் அருகே நின்று கொண்டு இருந்தார். இதனை பார்த்த அவர்கள் அவரை பிடிக்க சென்றனர். விஸ்வநாத் தப்பி செல்ல முயன்றார்.

அவரை பெற்றோர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் பிடிக்க சென்றனர். ஆனால் அதற்குள் அவர் தப்பி சென்றார். இதுகுறித்து இளம்பெண்ணின் பெற்றோர் பண்ட்வால் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

கண்காணிப்பு கேமரா

மேலும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், மோட்டார் சைக்கிளில் விஸ்வநாத் வந்துள்ளார். பின்னர் அதனை அந்தப்பகுதியில் நிறுத்திவிட்டு இளம்பெண்ணின் வீட்டிற்குள் அவர் நுழைந்துள்ளார்.

பின்னர் சிறிது நேரம் கழித்து விஸ்வநாத் இளம்பெண்ணின் வீட்டில் இருந்து ஓடி வருவதும் பதிவாகி இருந்தது. இதுகுறித்து பண்ட்வால் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து அந்த நபரை போலீசார் தேடி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்