மைனர் பெண்ணுக்கு பாலியல் தொல்லை; காய்கறி வியாபாரி கைது
|மங்களூரு அருகே, மைனர் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த காய்கறி வியாபாரி போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
மங்களூரு;
பாலியல் தொல்லை
தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு அருகே காவூர் பகுதியில் உள்ள வாடகை வீட்டில் மைனா் பெண் ஒருவள் தனது தாயுடன் வசி்த்து வருகிறார். இதேபோல் பஞ்சிமொகரை பகுதியை சேர்ந்தவர் முஸ்தபா(வயது 35).
இவர், காவூர் பகுதியில் காய்கறி கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு மைனர் பெண் சென்று, வீட்டுக்கு காய்கறி வாங்குவது வழக்கம்.
அப்போது முஸ்தபா, மைனர் பெண்ணிடம் செல்போன் எண் கேட்டதாக தெரிகிறது. ஆனால் மைனர் பெண், செல்போன் எண்ணை கொடுக்கவில்லை. இதற்கிடையே சிறுமியின் தாய், முஸ்தபாவை ஒரு வேலை விஷயமாக செல்போன் மூலம் அழைத்துள்ளார்.
அந்த செல்போன் எண்ணை பதிந்து வைத்துகொண்ட முஸ்தபா, ெதாடர்ந்து அந்த செல்போன் எண் மூலம் மைனர் பெண்ணை தொடர்பு கொண்டு ஆபாசமாக பேசி வந்துள்ளார்.
கைது
இந்த நிலையில் கடந்த 8-ந்தேதி மைனர் பெண் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இதையறிந்த முஸ்தபா, மைனர் பெண்ணின் வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர், அங்கு சென்ற அவர் மைனர் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்து உள்ளார்.
மேலும் நடந்த விஷயத்தை வெளியே கூறினால் கொன்றுவிடுவதாக கொலை மிரட்டல் விடுத்து சென்றுள்ளார். ஆனாலும் மைனர் பெண், வீட்டிற்கு வந்த தாயிடம் நடந்த விஷயத்தை கதறி அழுதபடி கூறினாள்.
இதை கேட்டு மைனர் பெண்ணின் தாய் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து உடனடியாக அவர், காவூர் மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
அந்த புகாரின் பேரில் போலீசார் காய்கறி கடை உரிமையாளர் முஸ்தபாவை கைது செய்தனர். மேலும் கைதான முஸ்தபா மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்திவருகின்றனர்.