< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
பெண் போலீஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை: முன்னாள் போலீஸ் டி.ஜி.பி.யின் மேல்முறையீட்டு மனு மீது இன்று விசாரணை
|17 May 2024 12:18 AM IST
தமிழக முன்னாள் டி.ஜி.பி. ராஜேஷ் தாசுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து விழுப்புரம் கோர்ட்டு தீர்ப்பு அளித்திருந்தது.
புதுடெல்லி,
பெண் போலீஸ் சூப்பிரண்டுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் தமிழக முன்னாள் டி.ஜி.பி. ராஜேஷ் தாசுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து விழுப்புரம் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார். இதனை எதிர்த்து ராஜேஷ் தாஸ் சார்பில் வக்கீல் கார்த்திக் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை நீதிபதிகள் பேலா எம்.திரிவேதி, பங்கஜ் மித்தல் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று (வெள்ளிக்கிழமை) விசாரிக்கிறது.