< Back
தேசிய செய்திகள்
புகார் கொடுக்க வந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை: போலீஸ் இன்ஸ்பெக்டர் பணிநீக்கம்
தேசிய செய்திகள்

புகார் கொடுக்க வந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை: போலீஸ் இன்ஸ்பெக்டர் பணிநீக்கம்

தினத்தந்தி
|
12 March 2023 4:58 AM IST

பணி ஓய்வுபெற சிலமாதங்களே உள்ள நிலையில் சிவசங்கரன் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

காசர்கோடு, -

கேரள மாநிலத்தை சேர்ந்தவர் சிவசங்கரன் (வயது 56). காசர்கோடு போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். இந்தநிலையில் புகார் கொடுக்க வந்த ஒரு பெண்ணை கடந்த 2019-ம் ஆண்டு சிவசங்கரன் தன்னுடைய அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி பாலியல் தொல்லை கொடுத்தாராம். பின்னர் அந்த பெண்ணை நிர்வாணமாக படம் எடுத்தும் மிரட்டியுள்ளார்.

இதனால் அந்த பெண் போலீசில் புகார் அளித்துள்ளார். வழக்கு தொடர்பாக பேச அழைத்த அந்த பெண்ணை சிவசங்கரன் கார் ஏற்றி கொலை செய்ய முயன்றதாகவும் தெரிகிறது. அந்த பெண் கொடுத்த புகாரையடுத்து அவர் மீது துறை ரீதியான விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இந்தநிலையில் கேரள மாநில டி.ஜி.பி. அனில் காந்த், சிவசங்கரன் மீதான புகாரின் பேரில் அவரை பணிநீக்கம் செய்ய உத்தரவிட்டுள்ளார். இவர் ஏற்கனவே பாலியல் பலாத்காரம், சொத்து குவிப்பு உள்ளிட்ட பல வழக்குகளில் சிக்கி 4 முறை சஸ்பெண்டு ஆனவர்.

பணி ஓய்வுபெற சிலமாதங்களே உள்ள நிலையில் சிவசங்கரன் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

மேலும் செய்திகள்