< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் பிரிஜ்பூஷன் சிங்குக்கு டெல்லி கோர்ட்டு சம்மன்
|7 July 2023 10:36 PM IST
மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ்பூஷன் சிங் மீது டெல்லி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு நடந்த இந்த விசாரணையில் பிரிஜ்பூஷன் சிங் மீது டெல்லி தலைமை பெருநகர மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இதை கடந்த மாதம் விசாரித்த நீதிபதி மகிமா ராய் சிங், இந்த வழக்கை கூடுதல் தலைமை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டுக்கு மாற்றினார்.
அதை தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த கூடுதல் தலைமை பெருநகர மாஜிஸ்திரேட்டு ஹர்ஜீத் சிங் ஜஸ்பால், பிரிஜ்பூஷன் சிங்குக்கு நேற்று சம்மன் அனுப்ப உத்தரவிட்டார். இந்த வழக்கு விசாரணைக்காக வருகிற 18-ந் தேதி நேரில் ஆஜராகுமாறு அதில் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இதைப்போல அவரது துணை செயலாளர் வினோத் தோமருக்கும் சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது.