< Back
தேசிய செய்திகள்
டெல்லியில் ஸ்பா என்ற பெயரில் பாலியல் தொழில் - 2 பேர் கைது
தேசிய செய்திகள்

டெல்லியில் ஸ்பா என்ற பெயரில் பாலியல் தொழில் - 2 பேர் கைது

தினத்தந்தி
|
26 March 2023 11:32 PM IST

ஸ்பா என்ற பெயரில் பாலியல் தொழில் நடத்தி வந்த இருவரை போலீசார் கைது செய்தனர்.

புதுடெல்லி,

டெல்லி நிர்மான் விஹார் பகுதியில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் ஸ்பா என்ற பெயரில் பாலியல் தொழில் நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனை கண்டறிந்து உறுதி செய்வதற்காக காவலர் ஒருவர் வாடிக்கையாளர் போல் அந்த ஸ்பாவிற்கு சென்றுள்ளார்.

அப்போது அங்கு பணியாற்றும் 9 பெண்களில் ஒருவரை தேர்வு செய்யுமாறு வாடிக்கையாளரிடம் ஸ்பா ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் ஸ்பா கட்டணம் ஆயிரம் ரூபாய் என்றும், பாலியல் உறவுக்கு கூடுதலாக 2 ஆயிரம் ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

இதையடுத்து அங்கு பாலியல் தொழில் நடைபெறுவதை உறுதி செய்த காவலர், இது குறித்து காவல்துறைக்கு தகவல் அளித்தார். உடனடியாக அங்கு வந்த போலீசார், ஸ்பாவை நடத்தி வந்த ராம்சாகர், தீபக் ஆகிய 2 பேரை கைது செய்தனர். அந்த ஸ்பாவின் மேலாளர் அஜய் சிங் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர். இந்த ஸ்பா அதே பகுதியில் 2 ஆண்டுகளாக இயங்கி வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்