< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
பிரிஜ் பூஷன் மீது பாலியல் புகார்; பதில் மனு தாக்கல் செய்ய வீராங்கனைக்கு கோர்ட்டு உத்தரவு
|5 July 2023 6:49 AM IST
பிரிஜ் பூஷன் மீது பாலியல் புகாரில் பதில் மனு தாக்கல் செய்ய வீராங்கனைக்கு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
புதுடெல்லி,
இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷன் சிங் பாலியல் புகார் தெரிவித்து அவருக்கு எதிராக மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
இந்நிலையில் அவர் தனக்கும் பாலியல் தொந்தரவு செய்ததாக சிறுமியான ஒரு மல்யுத்த வீராங்கனை வழக்கு தொடுத்திருக்கிறார். டெல்லி கூடுதல் அமர்வு கோர்ட்டில் நடைபெறும் இந்த வழக்கில், கடந்த மாதம் 15-ந் தேதி போலீஸ் ஒரு அறிக்கை தாக்கல் செய்தது. அதில், இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று கோரியிருந்தது.
இந்நிலையில், வருகிற ஆகஸ்டு 1-ந் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வரும்போது, போலீஸ் அறிக்கை தொடர்பாக பதில்மனு தாக்கல் செய்யும்படி வீராங்கனை தரப்புக்கு கூடுதல் அமர்வு கோர்ட்டு நீதிபதி சவி கபூர் நேற்று உத்தரவிட்டார்.