< Back
தேசிய செய்திகள்
வேலைக்கார சிறுமிக்கு பாலியல் தொல்லை: மனைவியுடன் ராணுவ அதிகாரி கைது
தேசிய செய்திகள்

வேலைக்கார சிறுமிக்கு பாலியல் தொல்லை: மனைவியுடன் ராணுவ அதிகாரி கைது

தினத்தந்தி
|
27 Sept 2023 5:45 AM IST

வேலைக்கார சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மனைவியுடன் ராணுவ அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.

கவுகாத்தி,

அசாம் மாநிலத்தை சேர்ந்த ஒரு சிறுமி, இமாசல பிரதேசத்தின் பாலம்பூரில் ராணுவ மேஜர் ஒருவரின் வீட்டில் பணிப்பெண்ணாக வேலை பார்த்து வந்தார். அச்சமயத்தில் பாலியல் தொல்லை உள்பட பல்வேறு சித்ரவதைகளுக்கு சிறுமி ஆளாகினார்.

அங்கு இருந்து தப்பி வந்த அவர் இதுகுறித்து போலீசிடம் புகார் அளித்தார். அதன்பேரில் ராணுவ மேஜர் மீது போக்சோ உள்ளிட்ட வழக்குகள் பதியப்பட்டது. உடந்தையாக இருந்த மனைவியுடன் ராணுவ மேஜர் கைது செய்யப்பட்டார்.

மேலும் செய்திகள்