< Back
தேசிய செய்திகள்
தனிமை, கோபம்: 6 நாட்களில் 4 கொடூரக்கொலைகள் - சைக்கோ இளைஞரின் அதிரவைக்கும் பின்னணி
தேசிய செய்திகள்

தனிமை, கோபம்: 6 நாட்களில் 4 கொடூரக்கொலைகள் - 'சைக்கோ' இளைஞரின் அதிரவைக்கும் பின்னணி

தினத்தந்தி
|
2 Sep 2022 9:31 PM GMT

குழந்தை பருவம் முதல் அந்த இளைஞர் கோபமாகவும், தனிமையை விரும்பும் நபராக இருந்துள்ளார்.

போபால்,

மத்தியபிரதேச மாநிலத்தில் கடந்த 6 நாட்களில் 4 காவலாளிகள் கொடூரமான முறையில் கொல்லப்பட்டனர். சாஹர் மாவட்டத்தில் 3 காவலாளிகளும், போபால் மாவட்டத்தில் ஒரு காவலாளியும் கொல்லப்பட்டார். கடந்த 28-ம் தேதி இரவு கல்யாண் லொட்ஹி (வயது 50) என்ற காவலாளி சுத்தியலால் அடித்துக்கொல்லப்பட்டார்.

இதனை தொடர்ந்து கடந்த 29-ம் தேதி இரவு கல்லூரியில் காவலாளியாக வேலை செய்துவந்த ஷம்பு நாரயண் துபே (வயது 60) என்ற நபர் கல்லால் அடித்துக்கொல்லப்பட்டார்.

இதற்கு அடுத்து 30-ம் தேதி இரவு மங்கல் அஹிர்வார் என்ற காவலாளி கட்டையால் அடித்துக்கொல்லப்பட்டார். தொடர்ந்து கடந்த1-ம் தேதி இரவு சோனு வர்மா (வயது 23) என்ற காவலாளி கல்லால் அடுத்துக்கொல்லப்பட்டார்.

6 நாட்களில் 4 காவலாளிகள் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் மத்தியபிரதேசத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இந்த சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்திய போலீசார் 6 நாட்களில் 4 கொலைகள் செய்த 18 வயதான ஷிவ்பிரதாப் துருவ் என்ற 'சைக்கோ' இளைஞரை கைது செய்தனர்.

சாஹர் மாவட்டம் கிக்ரா கிராமத்தை சேர்ந்த ஷிவ்பிரதாப் 8-ம் வகுப்பு வரை படித்துள்ளார். சிறு வயது முதல் விவரிக்க முடியாத கோபம் கொண்டவராக ஷிவ்பிரதாப் இருந்துள்ளார். மேலும், பள்ளியிலும், கிராமத்திலும் அவருக்கு நண்பர்கள் என யாரும் இல்லாமல், தனிமையிலேயே இருந்துள்ளார்.

குடும்பத்தை விட்டு பிரிந்து சென்ற ஷிவ்பிரதாப் மராட்டியம் மற்றும் கோவா நகரங்களுக்கு சென்று வேலை செய்துள்ளார். அவ்வப்போது தனது கிராமத்திற்கு வருவதை வழக்கமாக கொண்டுள்ளார். கடந்த 11-ம் தேதி ரக்‌ஷாபந்தன் அன்று வீட்டிற்கு வந்த ஷிவ்பிரதாப் தனது தாய் சீதாபாயிடம் 'நான் விரைவில் பிரபலமடையப்போகிறேன்' என கூறியுள்ளார் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

6 நாட்களில் 4 காவலாளிகள் கொடூர கொலை செய்த சைக்கோ கொலையாளி ஷிவ்பிரதாப்பிடம் போலீசார் தொடர்ந்து விசாராணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்