< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
மனித உரிமைகளை மேம்படுத்த உணர்வும், இரக்கமும் அவசியம் - ஜனாதிபதி முர்மு
|11 Dec 2022 2:16 AM IST
மனித உரிமைகளை மேம்படுத்த உணர்வும், இரக்கமும் அவசியம் என்று ஜனாதிபதி முர்மு பேசினார்.
தேசிய மனித உரிமை ஆணையத்தின் சார்பில் மனித உரிமை நாள் விழா, டெல்லி விஞ்ஞான பவனில் நேற்று நடைபெற்றது. அதில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பங்கேற்று பேசுகையில், மனித உரிமைகளை மேம்படுத்த உணர்வும், இரக்கமும் அவசியமாகின்றன. மனிதருக்கும் கீழே நடத்தப்படுவோரின் இடத்தில் நம்மைப் பொருத்திப் பார்க்கும்போதுதான் அவர்களுக்கு செய்ய வேண்டியவை குறித்து தெரிந்துகொள்ள முடியும்.
உங்களை எப்படி நடத்த வேண்டுமோ அதுபோல பிறரை நீங்கள் நடத்துங்கள் என்ற வாக்கில் மனித உரிமை அடங்கியுள்ளது. விலங்குகளையும், மரங்களையும் அழித்ததன் விளைவுகளை நாம் தற்போது சந்தித்துவருகிறோம். இயற்கையை கண்ணியத்துடன் கையாளுவதற்கு மீண்டும் மீண்டும் கற்றுக்கொள்ள வேண்டும். அது அறம் சார்ந்த கடமை மட்டுமல்ல, அதுவே உயிர் வாழ்வதற்கான அவசியமும் ஆகும்.
இவ்வாறு அவர் பேசினார்.