முகநூலில் பெண்களுக்கு ஆபாச வீடியோ அனுப்பியவர் கைது
|பெங்களூருவில் முகநூலில் பெண்களுக்கு ஆபாச வீடியோ அனுப்பியவர் கைது செய்யப்பட்டார்.
பெங்களூரு:
பெங்களூருவை சேர்ந்த பெண் ஒருவர் பெங்களூரு பொருளாதார குற்றப்பிரிவு (சி.இ.என்.) போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதில், எனக்கு முகநூல் மூலம் புருஷோத்தம் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் 2 பேரும் முகநூலில் குறுந்தகவல் அனுப்பி வந்தோம். இந்த நிலையில் புருஷோத்தம் எனக்கு முகநூலில் ஆபாச வீடியோக்களை அனுப்பி வைத்தார். அவரை நான் எச்சரித்த போதும் தொடர்ந்து எனக்கு ஆபாச வீடியோ அனுப்பி வருகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தார். அந்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பெங்களூரு மடிவாளா ஜெய்பீம்நகரை சேர்ந்த புருஷோத்தம் (வயது 40) என்பவரை கைது செய்தனர்.
விசாரணையில், முகநூலில் இந்தியா, வெளிநாட்டு பெண்களுக்கு நண்பர்களாக இருக்க புருஷோத்தம் அழைப்பு விடுப்பார். அந்த அழைப்பை ஏற்றுக்கொண்டு குறுந்தகவல் அனுப்பும் பெண்களுக்கு புருஷோத்தம் ஆபாச வீடியோக்கள், புகைப்படங்களை அனுப்பி வந்தது தெரியவந்தது. கைதான புருஷோத்தமிடம் இருந்து போலீசார் அவர் பயன்படுத்திய செல்போனை பறிமுதல் செய்து கொண்டனர்.