< Back
தேசிய செய்திகள்
தேசிய கல்வி கொள்கை தொடர்பான கருத்தரங்கு - பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்
தேசிய செய்திகள்

தேசிய கல்வி கொள்கை தொடர்பான கருத்தரங்கு - பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்

தினத்தந்தி
|
7 July 2022 8:13 AM IST

தேசிய கல்வி கொள்கையை அமல்படுத்துவது தொடர்பான அகில இந்திய கல்வி சங்கத்தை வாரணாசியில் பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்க உள்ளார்.

புதுடெல்லி,

தேசிய கல்வி கொள்கையை நாடு முழுவதும் எவ்வாறு அமல்படுத்தலாம் என்பது குறித்து ஆலோசிக்க பல்கலைக்கழக மானியக் குழுவும், மத்திய கல்வி அமைச்சகமும் இணைந்து அகில இந்திய கல்வி சங்கம் என்ற பெயரில் மூன்று நாள் கருத்தரங்கை வாரணாசியில் ஏற்பாடு செய்துள்ளன.

பல்கலைக்கழக இயக்குனர்கள், துணை வேந்தர்கள், தொழில்துறை பிரதிநிதிகள், உத்தர பிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் பங்கேற்கும் இந்த கருத்தரங்கை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்க உள்ளார்.

மேலும் செய்திகள்