< Back
தேசிய செய்திகள்
ரிசர்வ் வங்கி வழிகாட்டுதலின்றி ஏ.டி.எம்.களில் நிரப்புவதற்காக கொண்டு செல்லப்பட்ட சுமார் 5 கோடி ரூபாய் பறிமுதல்
தேசிய செய்திகள்

ரிசர்வ் வங்கி வழிகாட்டுதலின்றி ஏ.டி.எம்.களில் நிரப்புவதற்காக கொண்டு செல்லப்பட்ட சுமார் 5 கோடி ரூபாய் பறிமுதல்

தினத்தந்தி
|
9 April 2023 11:31 AM GMT

கர்நாடகாவில், ரிசர்வ் வங்கி வழிகாட்டுதலின்றி ஏ.டி.எம்.களில் நிரப்புவதற்காக கொண்டு செல்லப்பட்ட சுமார் 5 கோடி ரூபாயை போலீசார் பறிமுதல் செய்தனர்.

பெங்களூரு,

கர்நாடகாவில், ரிசர்வ் வங்கி வழிகாட்டுதலின்றி ஏ.டி.எம்.களில் நிரப்புவதற்காக கொண்டு செல்லப்பட்ட சுமார் 5 கோடி ரூபாயை போலீசார் பறிமுதல் செய்தனர்.

கர்நாடகாவில் சட்டமன்றத் தேர்தலையொட்டி தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன. ஹெப்பகோடி பகுதி, வீரசந்திரா சிக்னல் அருகே சோதனைச்சாவடியில், போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஏ.டி.எம். இயந்திரங்களில் பணம் நிரப்புவதற்காக, 3 வேன்களில் கொண்டு செல்லப்பட்ட 4 கோடியே 75 லட்சம் ரூபாயை போலீசார் பறிமுதல் செய்தனர்.

தேர்தல் விதிகள்படி ரிசர்வ் வங்கியின் ஸ்கேன் விவரம், பணம் கொண்டு செல்லப்படும் பெட்டியின் மீது ஒட்டப்பட்டிருக்க வேண்டும். அந்த வகையில், பணம் கொண்டு சென்ற 3 வாகனங்களிலும் ஸ்கேனர் ஒட்டப்படாத நிலையில், பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்