< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
பாகிஸ்தானில் இருந்து இந்திய எல்லைக்குள் நுழைந்த டிரோன் - பாதுகாப்புப் படையினர் கைப்பற்றினர்
|22 Oct 2023 9:48 PM IST
பாகிஸ்தானில் இருந்து இந்திய எல்லைக்குள் நுழைந்த டிரோனை எல்லை பாதுகாப்புப் படையினர் கைப்பற்றினர்.
சண்டிகர்,
பஞ்சாப் மாநிலம் பெரோஸ்பூர் மாவட்டம் சாங்கே கிராமத்தில் பாகிஸ்தான் எல்லை அருகே பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த எல்லை பாதுகாப்புப் படையினர், இந்திய எல்லைக்குள் டிரோன் ஒன்று நுழைந்ததை கண்டறிந்தனர். அந்த டிரோன் அங்குள்ள வயல்வெளியில் விழுந்ததாக தகவல் கிடைத்தது.
இதையடுத்து எல்லை பாதுகாப்புப் படையினர் மற்றும் பஞ்சாப் போலீசார் இணைந்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு உடைந்த நிலையில் விழுந்து கிடந்த டிரோனை கைப்பற்றினர். இந்தியா-பாகிஸ்தான் எல்லை வழியாக போதைப்பொருள் கடத்தலுக்கு டிரோன்கள் பயன்படுத்தப்படுவதாகவும், இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் எல்லை பாதுகாப்புப் படை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.