< Back
தேசிய செய்திகள்
கங்கை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுவரும் பாலம் இடிந்து விபத்து
தேசிய செய்திகள்

கங்கை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுவரும் பாலம் இடிந்து விபத்து

தினத்தந்தி
|
17 Aug 2024 11:32 AM IST

கங்கை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுவரும் பாலம் இடிந்து விபத்துள்ளானது.

பாட்னா,

பீகார் மாநிலம் கஹரியா மாவட்டத்தில் கங்கை ஆற்றின் குறுக்கே பாலம் கட்டப்பட்டு வருகிறது. சுல்தான்கஞ்ச் - குவானி கட் பகுதிகளை இணைக்க இப்பாலம் கட்டப்பட்டு வருகிறது. 9 ஆண்டுகளுக்குமுன் தொடங்கப்பட்ட பாலத்தின் கட்டும்பணி மெல்ல நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், கட்டுமான பணிகள் நடைபெற்று வரும் நிலையில் பாலத்தின் ஒரு பகுதி இன்று இடிந்து கங்கை ஆற்றில் விழுந்தது. இந்த சம்பவத்தில் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.

கட்டுமான பணிகள் தொடங்கிய 9 ஆண்டுகளில் ஏற்னவே 2 முறை இப்பாலம் இடிந்து விழுந்துள்ளது. தற்போது 3வது முறையாக பாலம் இடிந்து விழுந்துள்ளதால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்