< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
காற்றுமாசு சற்று குறைவு: தலைநகர் டெல்லியில் நாளை முதல் பள்ளிகள் திறப்பு
|19 Nov 2023 5:48 AM IST
தலைநகர் டெல்லியில் காற்றுமாசுபாடு சற்று குறைந்துள்ளது
டெல்லி,
தலைநகர் டெல்லியில் காற்றின் தரம் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. குறிப்பாக, தீபாவளி மற்றும் அதற்கு முந்தைய நாட்களில் டெல்லியில் காற்று மாசுபாடு மிகவும் அதிக அளவில் இருந்தது.
இதனிடையே, காற்று மாசுபாடு காரணமாக டெல்லியில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு கடந்த 9ம் தேதி முதல் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், டெல்லியில் நாளை முதல் அனைத்துப்பள்ளிகளும் திறக்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. காற்றின் தரம் சற்று அதிகரித்ததையடுத்து பள்ளிகளை திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது.