< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
|13 Nov 2023 10:02 PM IST
தமிழகம் மற்றும் புதுவையின் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது.
சென்னை,
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களிலும், உள்தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்யும் என வானிலை ஆய்வுமையம் தெரிவித்து இருந்தது. அதன்படி, தமிழகம் மற்றும் புதுவையின் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில், கனமழை எச்சரிக்கை காரணமாக, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (14.11.2023) ஒருநாள் விடுமுறை அளித்து கல்வித்துறை மந்திரி நமச்சிவாயம் அறிவித்துள்ளார்.