< Back
தேசிய செய்திகள்
பள்ளி மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை
தேசிய செய்திகள்

பள்ளி மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை

தினத்தந்தி
|
20 Aug 2022 8:42 PM IST

உடுப்பி அருகே, பள்ளி மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மங்களூரு;


உடுப்பி மாவட்டம் குந்தாபுரா தாலுகா சங்கரநாராயணா போலீஸ் எல்லைக்குட்பட்ட ஹாலாடி பகுதியை சேர்ந்தவன் கணேசா (வயது 14). இவன் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தான்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் கணேசா மட்டும் வீ்ட்டில் தனியாக இருந்தான். அந்த சமயத்தில் அவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டான். ெவளியே சென்றிருந்த அவனது பெற்றோர், கணேசாவின் உடலை பார்த்து கதறி அழுதனர்.

அவனுடைய தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை. இதுகுறித்து சங்கரநாராயணா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்