< Back
தேசிய செய்திகள்
மேற்கு வங்கத்தில் பள்ளிக்குள் துப்பாக்கியுடன் நுழைந்து மிரட்டல் விடுத்த நபரால் பரபரப்பு
தேசிய செய்திகள்

மேற்கு வங்கத்தில் பள்ளிக்குள் துப்பாக்கியுடன் நுழைந்து மிரட்டல் விடுத்த நபரால் பரபரப்பு

தினத்தந்தி
|
26 April 2023 8:32 PM IST

பள்ளிக்குள் நுழைந்த ராஜு பல்லவ் என்ற நபர் துப்பாக்கி மற்றும் கத்தியை காட்டி மாணவர்களுக்கு மிரட்டல் விடுத்தார்.

கொல்கத்தா,

மேற்கு வங்க மாநிலம் மால்டா பகுதியில் உள்ள அரசு பள்ளிக்குள் நுழைந்த நபர் ஒருவர் துப்பாக்கி மற்றும் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களைக் காட்டி அங்குள்ள மாணவர்களை மிரட்டினார். மேலும் அந்த நபர் மெர்குரி, ஆசிட் நிறைந்த பாட்டில்களையும் தனது கையில் வைத்திருந்தார். இதனால் மாணவர்கள் மிகவும் அச்சமடைந்தனர்.

இதையடுத்து அப்பகுதியைச் சேர்ந்த உள்ளூர் இளைஞர்கள் சிலர் அங்கே வந்து அந்த நபரிடம் சாதுரியமாக பேச்சு கொடுத்துக் கொண்டே அவரை மடக்கிப் பிடித்தனர். பின்னர் அவரிடம் இருந்த ஆயுதங்கள், ஆசிட் பாட்டில்களை பறிமுதல் செய்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

அந்த நபரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர் பெயர் ராஜு பல்லவ் என்பது தெரியவந்துள்ளது. அவர் மனநலம் பாதிக்கப்பட்டவராக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இந்த சம்பவத்தால் அந்த பள்ளியில் பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



Related Tags :
மேலும் செய்திகள்