< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை; 'போக்சோ'வில் வாலிபர் கைது
|2 Aug 2023 12:15 AM IST
பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் ‘போக்சோ’வில் வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மங்களூரு:
மங்களூரு உல்லால் போலீஸ் எல்லைக்குட்பட்ட முடிப்பு பகுதியை சேர்ந்தவர் மூவத் (வயது 35). இவர் நேற்று முன்தினம் தலப்பாடி பகுதியில் உள்ள பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு பள்ளி மாணவி ஒருவள் வந்துள்ளாள். இந்த நிலையில் மூவத், திடீரென்று அந்த பள்ளி மாணவிக்கு பாலியல் ெதால்லை கொடுத்ததாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த மாணவி, கத்தி கூச்சலிட்டு்ள்ளாள். இதனை கேட்டு அங்கிருந்த ஆட்டோ டிரைவர்கள் விரைந்து வந்து, மூவத்தை பிடித்து தர்மஅடி கொடுத்தனர். பின்னர் அவரை உல்லால் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் மூவத்தை கைது செய்தனர். இதுகுறித்து உல்லால் போலீசார் 'போக்சோ' சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.