< Back
தேசிய செய்திகள்
டிராக்டர் மீது பள்ளிப் பேருந்து மோதி பயங்கர விபத்து - 4 மாணவர்கள் உயிரிழப்பு
தேசிய செய்திகள்

டிராக்டர் மீது பள்ளிப் பேருந்து மோதி பயங்கர விபத்து - 4 மாணவர்கள் உயிரிழப்பு

தினத்தந்தி
|
30 Jan 2024 5:42 AM IST

ஆண்டு விழாவை முடித்துக் கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த நிலையில் அழகூர் என்ற பகுதியில் டிராக்டர் மீது பேருந்து மோதி விபத்திற்குள்ளானது.

பாகல்கோட்டை,

கர்நாடகாவின் பாகல்கோட்டை மாவட்டத்தில் பள்ளி பேருந்தும், டிராக்டரும் மோதிக் கொண்ட விபத்தில் 4 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜமகண்டி நகரில் உள்ள தனியார் பள்ளியின் ஆண்டு விழாவை முடித்துக் கொண்டு நள்ளிரவில் பள்ளி பேருந்தில் மாணவர்கள் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது அழகூர் என்ற பகுதியில் டிராக்டர் மீது பேருந்து மோதி விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் 4 மாணவர்கள் உயிரிழந்தனர். மேலும் 7 மாணவர்கள் படுகாயம் அடைந்தனர்.

காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்த மாணவர்கள் காவடகி கிராமத்தைச் சேர்ந்தவர்கள். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்