< Back
தேசிய செய்திகள்
மர்ம கும்பலிடம் தப்பிய பள்ளி மாணவன்
தேசிய செய்திகள்

மர்ம கும்பலிடம் தப்பிய பள்ளி மாணவன்

தினத்தந்தி
|
26 Aug 2023 3:41 AM IST

டி.நரசிப்புராவில் மர்ம கும்பலிடம் இருந்து பள்ளி மாணவன் தப்பினான். பணத்திற்காக மர்மநபர்கள் கடத்தினார்களா? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

டி.நரசிப்புரா:

டி.நரசிப்புராவில் மர்ம கும்பலிடம் இருந்து பள்ளி மாணவன் தப்பினான். பணத்திற்காக மர்மநபர்கள் கடத்தினார்களா? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பள்ளி மாணவன்

மைசூரு மாவட்டம் டி.நரசிப்புரா தாலுகா டி.நகர் பகுதியை சோ்ந்தவர் மாணவன் அபிஷேக் (வயது 12). இவன் திருவேணி நகாில் உள்ள தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறான். இந்த நிலையில் நேற்று முன்தினம் அபிஷேக் பள்ளி வளாகத்தில் மாணவா்களுடன் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது அங்கு காரில் வந்த மர்மநபர்கள் 4 பேர் மாணவன் அபிேஷக்கிடம் வித்யோதயா சர்க்கிள் எங்கு உள்ளது என்று கேட்டுள்ளனா்.

அப்போது மாணவனின் முகத்தில் ஸ்பெரே அடித்தனர். இதில் மாணவன் மயங்கி கீழே விழுந்தான். இதையடுத்து அவனை மர்மநபர்கள் காரில் கடத்தி சென்றனர். கார் நஞ்சன்கூடுவை நோக்கி சென்று கொண்டு இருந்தது. அப்போது அபிஷேக் திடீரென முழித்தான்.

தப்பி சென்றான்

அப்போது அவன் சிறுநீர் கழிக்க வேண்டும் என மர்மநபர்களிடம் கூறினான். இதையடுத்து காரை அவர்கள் நிறுத்தினர். அபிேஷக் சிறுநீர் கழிக்க சென்றான். அப்போது மர்மநபர்களிடம் இருந்து தப்பி அந்த வழியாக வந்த மோட்டார்் சைக்கிளில் ஏறி அபிஷேக் சென்றான். அவன் மோட்டார் சைக்கிளில் வந்த நபரிடம் தன்னை மர்மநபர்கள் கடத்தி விட்டதாகவும் என்னை டி.நரசிப்புராவில் விடும்படி ேகட்டு கொண்டான்.

இதையடுத்து, அந்த நபர் அபிஷேக்கை டி.நரசிப்புராவில் விட்டார். பின்னர் வீட்டிற்கு சென்ற மாணவன் பெற்றோரிடம் தன்னை மர்மநபர்கள் கடத்தி சென்றதாகவும் அவர்களிடம் நான் தப்பி வந்ததாகவும் கூறினான். இதனை கேட்டு பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து மாணவனின் பெற்றோர் டி.நரசிப்புரா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

பணத்திற்காக கடத்தலா?

அதன்பேரில் போலீசார் மாணவனை பணத்திற்காக மர்மநபர்கள் கடத்தினார்களா? அல்லது வேறு ஏதும் காரணமா என போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.

மேலும் செய்திகள்