< Back
தேசிய செய்திகள்
நீதிமன்ற வளாகத்தில் முன்னாள் ஜனாதிபதிக்கு சிலை: தலைமை நீதிபதிக்கு பார்கவுன்சில் கடிதம்

கோப்புப்படம்

தேசிய செய்திகள்

நீதிமன்ற வளாகத்தில் முன்னாள் ஜனாதிபதிக்கு சிலை: தலைமை நீதிபதிக்கு பார்கவுன்சில் கடிதம்

தினத்தந்தி
|
29 April 2024 3:14 AM IST

நீதிமன்ற வளாகத்தில் முன்னாள் ஜனாதிபதிக்கு சிலை அமைக்கக் கோரி தலைமை நீதிபதி சந்திரசூட்டுக்கு பார்கவுன்சில் கடிதம் எழுதியுள்ளது.

புதுடெல்லி,

டெல்லியில் உள்ள சுப்ரீம் கோர்ட்டு வளாகத்தில் நாட்டின் முதல் ஜனாதிபதி ராஜேந்திர பிரசாத் மற்றும் முதல் தலைமை நீதிபதி எச்.ஜே.கனியா ஆகியோரது சிலைகளை நிறுவ வேண்டுமென சுப்ரீம் கோர்ட்டு பார்கவுன்சில் வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டின் தற்போதைய தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்டுக்கு பார்கவுன்சில் கடிதம் அனுப்பியுள்ளது. இந்த கோரிக்கையை பரிசீலித்து, குறிப்பிட்ட இடங்களில் அந்த சிலைகளை நிறுவுவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய சம்பந்தப்பட்ட துறைக்கு தேவையான அறிவுறுத்தல்களை தலைமை நீதிபதி வழங்கிட வேண்டும் என அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்