< Back
தேசிய செய்திகள்
எஸ்.சி., எஸ்.டி. சட்டம் தவறாக பயன்படுத்துவது நீதி நடைமுறையை தடுக்கிறது-கர்நாடக ஐகோர்ட்டு கண்டனம்
தேசிய செய்திகள்

எஸ்.சி., எஸ்.டி. சட்டம் தவறாக பயன்படுத்துவது நீதி நடைமுறையை தடுக்கிறது-கர்நாடக ஐகோர்ட்டு கண்டனம்

தினத்தந்தி
|
8 Aug 2023 9:41 PM IST

எஸ்.சி., எஸ்.டி. சட்டம் தவறாக பயன்படுத்துவது நீதி நடைமுறையை தடுப்பதாக கர்நாடக ஐகோர்ட்டு கண்டனம் தெரிவித்துள்ளது.

பெங்களூரு, ஆக.9-

எஸ்.சி., எஸ்.டி. சட்டம்

கர்நாடகத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவரிடம் இருந்து கே.ஜே.பட்டீல் என்பவர் நிலம் வாங்கினார். அந்த நிலத்திற்கு உரிமை கோரி கிருஷ்ணமூர்த்தியின் மகன் புருஷோத்தம் என்பவர் சிவில் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். கடந்த 2018-ம் ஆண்டு கே.ஜே.பட்டீலின் மகன்கள் ரிஷிக் லால் பட்டீல், புருஷேத்தமா ஆகியோருக்கு எதிராக எஸ்.சி., எஸ்.டி.(ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்) அத்துமீறல் சட்டத்தின் கீழ் புகார் அளித்தார். அதன் பேரில் அந்த சகோதரர்கள் மீது எஸ்.சி., எஸ்.டி. சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கை ரத்து செய்ய கோரி சகோதரர்கள் 2 பேரும் கர்நாடக ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை நீதிபதி நாகபிரசன்னா விசாரித்து வந்தார்.

வழக்கு ரத்து

இருதரப்பினரின் வாதங்களையும் கேட்ட நீதிபதி நாகபிரசன்னா, மனுதாரர்கள் மீதான வழக்கை ரத்து செய்து தீர்ப்பு வழங்கினார். நீதிபதி தனது தீர்ப்பில் கூறியதாவது:-

சிவில் வழக்கிற்கு கிரிமினல் சாயம் பூசி இருக்கிறார்கள் என்பதால் இதில் வேறு என்ன இருக்க முடியும் என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. இந்த வழக்கை ரத்து செய்யாவிட்டால் சட்டத்தை தவறாக பயன்படுத்துவதாக அமைந்துவிடும்.

சிறந்த உதாரணம்

மேலும் புகாருக்கு உள்ளானவர்களை தொந்தரவு செய்வது மட்டுமின்றி நீதி தவறுவதாகவும் அமைந்துவிடும். அதனால் மனுதாரர்கள் மீதான கிரிமினல் வழக்கை ரத்து செய்கிறேன். எஸ்.சி., எஸ்.டி. சட்டம் தவறாக பயன்படுத்தப்படுகிறது என்பதற்கு இந்த வழக்கு ஒரு சிறந்த உதாரணம். அதை கண்டிக்கிறேன்.

இதுபோன்ற வழக்குகளால் கோர்ட்டின் நேரத்தை வீணாக்குகிறது. இதனால் நேர்மையான வழக்குகளை தாக்கல் செய்கிறவர்கள் பாதிக்கப்படுகிறார்கள்' என்றார்.

இவ்வாறு நீதிபதி தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்