< Back
தேசிய செய்திகள்
எஸ்.சி., எஸ்.டி. மக்களின் இடஒதுக்கீடு அதிகரிப்புக்கு கவர்னர் ஒப்புதல்
தேசிய செய்திகள்

எஸ்.சி., எஸ்.டி. மக்களின் இடஒதுக்கீடு அதிகரிப்புக்கு கவர்னர் ஒப்புதல்

தினத்தந்தி
|
23 Oct 2022 9:23 PM GMT

எஸ்.சி., எஸ்.டி. மக்களின் இடஒதுக்கீடு அதிகரிப்புக்கு கவர்னர் ஒப்புதல் அளித்துள்ளார்.

பெங்களூரு: கர்நாடகத்தில் எஸ்.சி., எஸ்.டி. மக்களுக்கு(தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்கள்) இடஒதுக்கீடு அதிகரிக்க சமீபத்தில் நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதன்பின்னர் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு 15-ல் இருந்து 17 சதவீதம் இடஒதுக்கீடும், பழங்குடியின மக்களுக்கு 3-ல் இருந்து 7 சதவீதமாக இடஒதுக்கீடும் உயர்த்தி அரசு அறிவித்து மந்திரிசபை கூட்டத்தில் அனுமதிக்கப்பட்டது. இந்த இடஒதுக்கீடு நீதிபதி நாகமோகன்தாஸ் அறிக்கைபடி விதிக்கப்பட்டது.

இதையடுத்து மாநில கவர்னர் தாவர்சந்த் கெலாட்டின் ஒப்புதல் கோரி கடிதம் அனுப்பி வைக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று கவர்னர் தாவர்சந்த் கெலாட், இடஒதுக்கீடு அதிகரிப்புக்கு ஒப்புதல் வழங்கி உள்ளார். இது எங்கள் அரசின் எஸ்.சி., எஸ்.டி. மக்களின் தீபாவளி பரிசு என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்