< Back
தேசிய செய்திகள்
காந்தியை கொல்ல கோட்சேவுக்கு, சாவர்க்கர் உதவி செய்தார்; பேரன் குற்றச்சாட்டு
தேசிய செய்திகள்

காந்தியை கொல்ல கோட்சேவுக்கு, சாவர்க்கர் உதவி செய்தார்; பேரன் குற்றச்சாட்டு

தினத்தந்தி
|
22 Nov 2022 9:59 PM IST

மகாத்மா காந்தியை கொல்ல சக்திவாய்ந்த துப்பாக்கியை கண்டறிய நாதுராம் கோட்சேவுக்கு வீரசாவர்க்கர் உதவி செய்ததாக பேரன் துஷார் காந்தி குற்றம்சாட்டி உள்ளார்

மும்பை,

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடந்த சில நாட்களுக்கு முன் வீரசாவர்க்கர் குறித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்தநிலையில் மகாத்மா காந்தியை கொலை செய்ய சக்திவாய்ந்த துப்பாக்கியை கண்டறிய நாதுராம் கோட்சேவுக்கு வீரசாவர்க்கர் உதவி செய்ததாக அவரது பேரன் துஷார் காந்தி குற்றம்சாட்டி உள்ளார்.

இதுதொடர்பாக அவர் டுவிட்டரில்:- சாவர்க்கர் ஆங்கிலேயர்களுக்கு மட்டும் உதவி செய்யவில்லை. அவர் மகாத்மா காந்தியை கொல்ல சக்திவாய்ந்த துப்பாக்கியை கண்டறியவும் நாதுராம் கோட்சேவுக்கு உதவி செய்தார். கொலை நடப்பதற்கு 2 நாட்கள் முன்பு வரை, காந்தியை கொல்ல நாதுராம் கோட்சேவிடம் சரியான ஆயுதங்கள் இல்லை. இந்திய ஒற்றுமை நடைபயணம் இந்திய நலனுக்கானது. அதை தடுக்க ஏற்படுத்தப்பட்ட சர்ச்சைகளை அனுமதிக்க வேண்டாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்