< Back
தேசிய செய்திகள்
செயற்கைக்கோள்களை தனியார் அமைப்புகளும் இயக்கலாம்; இஸ்ரோ தலைவர்
தேசிய செய்திகள்

செயற்கைக்கோள்களை தனியார் அமைப்புகளும் இயக்கலாம்; இஸ்ரோ தலைவர்

தினத்தந்தி
|
10 July 2022 7:05 AM IST

இந்தியாவில் தனியார் அமைப்புகளும் இனி செயற்கைக்கோள்களை இயக்கலாம் என இஸ்ரோ தலைவரான டாக்டர் எஸ். சோம்நாத் கூறியுள்ளார்.



புதுடெல்லி,



இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் (இஸ்ரோ) தலைவரான டாக்டர் எஸ். சோம்நாத் செய்தியாளர்களிடம் கூறும்போது, விண்வெளி துறையை சீர்படுத்த அரசு விரும்புகிறது. இதனையடுத்து விண்வெளி கொள்கை 2022 உருவாக்கப்பட்டு உள்ளது.

இந்த கொள்கையின்படி, இனி செயற்கைக்கோள்களுக்கு தனியார் அமைப்புகளும் உரிமையாளராகலாம். அவற்றை இயக்கலாம். இதற்கு முன்புவரை இஸ்ரோ மற்றும் பாதுகாப்பு அமைச்சகம் மட்டுமே அவற்றை வைத்திருக்க முடியும் என கூறியுள்ளார்.

இந்த மாத இறுதிக்குள் அல்லது ஆகஸ்டு தொடக்கத்தில் சிறிய ரக, செயற்கைக்கோள்களை ஏவும் ராக்கெட் விண்வெளிக்கு அனுப்பி பரிசோதனை செய்யப்படும் என அவர் கூறியுள்ளார்.

இதேபோன்று, தனியார் அமைப்புகள் ராக்கெட்டுகளுக்கும் இனி உரிமையாளராக இருக்கலாம். அவர்களே அதனை உருவாக்கி, ராக்கெட்டை விண்வெளிக்கு அனுப்பவும் செய்யலாம். இதற்கான ஏவுதளம் கூட அவர்களே கட்டி கொள்ளலாம். விண்வெளி துறையில் புதிய தளங்களை உருவாக்க வேண்டும் என்பதே எங்களது இலக்கு என்று அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்