< Back
தேசிய செய்திகள்
ஆற்று படுகைகளில் மணல் எடுக்க தடை; கர்நாடக அரசு தகவல்
தேசிய செய்திகள்

ஆற்று படுகைகளில் மணல் எடுக்க தடை; கர்நாடக அரசு தகவல்

தினத்தந்தி
|
16 Sep 2022 6:45 PM GMT

ஆற்று படுகைகளில் மணல் அள்ள தடை விதித்து கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.

பெங்களூரு:

கர்நாடக சட்டசபையில் நேற்று கேள்வி நேரத்தில் ஜனதா தளம்(எஸ்) உறுப்பினர் அன்னதாணி கேட்ட கேள்விக்கு கனிம வளத்துறை மந்திரி ஹாலப்பா ஆச்சார் பதிலளிக்கையில் கூறியதாவது:-

கர்நாடகத்தில் காவிரி படுகை உள்பட ஆற்று படுகைகள் மற்றும் கிராமங்களில் மணல் எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடையை மீறி மணல் எடுப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ஆறுகளில் மணல் எடுப்பதால் அவற்றுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து சுப்ரீம் கோர்ட்டு வழக்கு ஒன்றில் தீர்ப்பு வழங்கியுள்ளது. அந்த தீர்ப்பின் அடிப்படையில் மத்திய சுற்றுச்சூழல் துறை மணல் எடுப்பது தொடர்பாக ஒரு வழிகாட்டுதலை வெளியிட்டுள்ளது.

அதன்படி கர்நாடகத்தில் ஆற்று பகுதியில் மணல் சுரங்க தொழிலுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆறுகள் மற்றும் கிராமங்களில் மணல் பகுதிகளை அரசு அடையாளம் காணாது.

இவ்வாறு ஹாலப்பா ஆச்சார் கூறினார்.

மேலும் செய்திகள்