< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
சமாஜ்வாடி கட்சியின் தமிழ்நாடு பிரிவு கலைப்பு
|20 Feb 2024 12:59 PM IST
சமாஜ்வாடி கட்சியின் தேசிய தலைவராக அகிலேஷ் யாதவ் உள்ளார்.
லக்னோ,
உத்தர பிரதேச மாநிலத்தின் முன்னணி கட்சியாக சமாஜ்வாடி கட்சி இருந்து வருகிறது. இந்த கட்சி உத்தரகாண்ட், மத்திய பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களிலும் வலுவாக இருந்து வருகிறது .
இதனால் இந்த கட்சி தேசிய கட்சியாக கருதப்படுகிறது. சமாஜ்வாடி கட்சியின் தேசிய தலைவராக அகிலேஷ் யாதவ் உள்ளார். சமாஜ்வாடி கட்சிக்கு தமிழ்நாடு, ஆந்திரா உள்ளிட்ட இடங்களில் அமைப்புகள் உள்ளன.
இந்த நிலையில் கட்சியின் தேசிய தலைவர் அகிலேஷ் யாதவின் அறிவுறுத்தலின்படி தலைவர் பதவி உள்பட தமிழ்நாடு பிரிவு கலைக்கப்படுகிறது. இது உடனடியாக அமலுக்கு வருகிறது என அக்கட்சி சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.