< Back
தேசிய செய்திகள்
உ.பி. முன்னாள் மந்திரி அசம் கானுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை
தேசிய செய்திகள்

உ.பி. முன்னாள் மந்திரி அசம் கானுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை

தினத்தந்தி
|
27 Oct 2022 4:04 PM GMT

பிரதமர் மோடி மற்றும் உ.பி., முதல்-மந்திரி குறித்து வெறுப்பை தூண்டும் வகையில் பேசிய வழக்கில் சமாஜ்வாதி கட்சியின் அசம்கானுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

லக்னோ,

சமாஜ்வாதி கட்சி தலைவர் அசம் கான் கடந்த 2019ம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் பிரதமர் மோடி, முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் ஆகியோரை அவதூறாகப் பேசியதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக அசம் கான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

இந்நிலையில், இந்த வழக்கு உத்தர பிரதேச ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த ஐகோர்ட், சமாஜ்வாதி கட்சி தலைவர் அசம் கான் மற்றும் இருவருக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனையும் 2000 ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டுள்ளது. இதனால் அவரது எம்எல்ஏ பதவி பறிபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 2 அல்லது அதற்கு மேல் சிறை தண்டனை பெற்றவர்கள் பதவி வகிக்க முடியாது என்பது சட்டமாகும்.

மேலும் செய்திகள்