< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தையொட்டி, கேரளாவில் களைகட்டிய மது விற்பனை
|25 Dec 2023 7:34 PM IST
ஞாயிற்றுக்கிழமையான நேற்று மட்டும் 70.73 கோடி ரூபாய்க்கு மதுபானம் விற்பனை செய்யப்பட்டது.
கோழிக்கோடு,
கேரளாவில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தையொட்டி மதுபான விற்பனை களைகட்டிய நிலையில், 3 நாட்களில் 155 கோடி ரூபாய்க்கு மதுபானம் விற்பனையாகியுள்ளது. ஞாயிற்றுக்கிழமையான நேற்று மட்டும் 70.73 கோடி ரூபாய்க்கு மதுபானம் விற்பனை செய்யப்பட்டது.
மூன்று நாட்கள் மது விற்பனையில், சாலக்குடி பகுதியில் மட்டும் 63.85 லட்சம் ரூபாய்க்கு மதுபானம் விற்பனையாகி மாநிலத்தில் முதலிடத்தை பிடித்துள்ளது. சங்ஙனாசேரியில் 62.87 லட்சம் ரூபாய்க்கும், இரிஞ்ஞாலக்குடாவில் 62.31 லட்சம் ரூபாய்க்கும் மதுபானம் விற்பனையானது.