< Back
தேசிய செய்திகள்
டெல்லியில் தள்ளுபடி விலையில் தக்காளி விற்பனை - தேசிய வேளாண் கூட்டமைப்புக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்
தேசிய செய்திகள்

டெல்லியில் தள்ளுபடி விலையில் தக்காளி விற்பனை - தேசிய வேளாண் கூட்டமைப்புக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

தினத்தந்தி
|
12 July 2023 9:00 AM GMT

தக்காளி விலை அதிகமாக இருக்கும் பகுதிகளில் தள்ளுபடி விலையில் விற்கவும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

புதுடெல்லி,

நாடு முழுவதும் தக்காளியின் விலை அதிகரித்து காணப்படுகிறது. வரத்து குறைவு, விளைச்சல் பாதிப்பு மற்றும் மழை காரணமாக விலை அதிகரித்திருப்பதாக கூறப்படுகிறது. தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்தி, சீரான விநியோகத்தை உறுதி செய்ய மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

அந்த வகையில் தலைநகர் டெல்லி மற்றும் அதனைச் சுற்றியுள்ள புறநகர் பகுதிகளில் தள்ளுபடி விலையில் தக்காளி விற்பனை செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன்படி தக்காளியை கொள்முதல் செய்து அதிகம் நுகரப்படும் மையங்களுக்கு விநியோகம் செய்ய தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்தல் கூட்டமைப்புக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.

இதன் அடிப்படையில் கர்நாடகா, மகாராஷ்டிரா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து தக்காளி கொள்முதல் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தக்காளி விலை அதிகமாக இருக்கும் பகுதிகளில் தள்ளுபடி விலையில் விற்கவும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. டெல்லியில் வரும் வெள்ளிக்கிழமைக்குள் சில்லறை விற்பனை மையங்கள் மூலம் தள்ளுபடி விலையில் தக்காளி விற்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்