< Back
தேசிய செய்திகள்
அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கு சம்பள உயர்வு; மந்திரி ஸ்ரீராமுலு தகவல்
தேசிய செய்திகள்

அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கு சம்பள உயர்வு; மந்திரி ஸ்ரீராமுலு தகவல்

தினத்தந்தி
|
17 Sept 2022 12:15 AM IST

கர்நாடக அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு சம்பள உயர்வு அளிக்கப்படும் என்று மந்திரி ஸ்ரீராமுலு கூறினார்.

பெங்களூரு"

கர்நாடக மேல்-சபையில் நேற்று கேள்வி நேரத்தில் பா.ஜனதா உறுப்பினர் அருண் கேட்ட கேள்விக்கு போக்குவரத்து மந்திரி ஸ்ரீராமுலு பதிலளிக்கையில் கூறியதாவது:-

கர்நாடகத்தில் அரசு போக்குவரத்து கழகங்களில் சுமார் 1.30 லட்சம் பேர் பணியாற்றி வருகிறார்கள். அவர்களுக்கு கடைசியாக கடந்த 2016-ம் ஆண்டு சம்பளம் உயர்த்தப்பட்டது. அதன் பிறகு சம்பளம் மாற்றி அமைக்கப்படவில்லை என்பது எனது கவனத்திற்கு வந்துள்ளது. சம்பள உயர்வு உள்பட பல்வேறு கோரிக்கையை முன்வைத்து போக்குவரத்து ஊழியர்கள் கடந்த 2021-ம் ஆண்டு வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். அதனால் அவர்களின் சம்பளத்தை உயர்த்துவது குறித்து ஆலோசிக்கப்படுகிறது. இதுகுறித்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையுடன் பேசினேன்.

அரசு போக்குவரத்து கழகங்களின் சீரமைப்பு பணிகளுக்கு மாநில அரசு ரூ.12 ஆயிரம் கோடி நிதி உதவி வழங்கியுள்ளது. கொரோனா ஊரடங்கு காலத்தில் ஊழியர்களுக்கு அரசே சம்பளம் வழங்கியது. அரசு போக்குவரத்து கழக பஸ்களில் தினமும் 90 லட்சம் பேர் பயணிக்கிறார்கள். தினமும் ரூ.4 லட்சத்திற்கு டீசல் வாங்கப்படுகிறது.

இவ்வாறு ஸ்ரீராமுலு கூறினார்.

மேலும் செய்திகள்