ஓணம் பண்டிகை: சபரிமலை கோவில் நடை திறப்பு
|ஓணம் பண்டிகையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று திறக்கப்பட்டது.
திருவனந்தபுரம்,
ஓணம் பண்டிகையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று திறக்கப்பட்டது. சபரிமலையில் திருவோண பூஜைகளுக்காக இன்று மாலை 5 மணிக்கு நடை திறக்கக்கப்பட்டது. வேறு பூஜைகள் நடைபெறாமல் இரவு 9 மணிக்கு நடை அடைக்கப்படும்.
நாளை அதிகாலை 5 மணிக்கு நடை திறந்த பின்னர், வழக்கான பூஜைகளும், நெய் அபிஷேகமும் நடைபெறும். நாளை மறுநாள் திருவோண சிறப்பு பூஜைகள் நடைபெறும். சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறாது. வரும் 10 ஆம் தேதி வரை கோவில் நடை திறந்து இருக்கும்.
நடை திறக்கப்பட்டுள்ள இந்த நாட்களில் படி பூஜை, உதயஸ்தமன பூஜை, அஷ்டாபிஷேகம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது. சபரிமலைக்கு வரும் பக்தர்கள் அனைவருக்கும் 7 ஆம் தேதி முதல் 9 ஆம் தேதி வரை ஓணம் விருந்து வழங்கப்படும்.
எல்லா நாட்களிலும், உதய அஸ்தமன பூஜையும், படி பூஜையும் நடைபெறும். நாளை முதல் 10ம் தேதி வரை தினமும் மதியம் பக்தர்களுக்கு ஓணம் விருந்து வழங்கப்படும். 10ம் தேதி இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்படும். தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு நடைபெற்று வருகிறது. நிலக்கல் பகுதியில் உடனடி முன்பதிவு செய்யும் வசதியும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும் எனத்தெரிகிறது.