< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
சபரிமலை கோவில் புதிய மேல்சாந்தி தேர்வு
|19 Oct 2023 1:54 AM IST
சபரிமலை அய்யப்பன் கோவிலில் புதிய மேல்சாந்தி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
திருவனந்தபுரம்,
சபரிமலை மேல்சாந்தியாக பணியாற்றி வருபவரின் பணிக்காலம் அடுத்த மாதம் (நவம்பர்) 15-ந் தேதியுடன் நிறைவு பெறுகிறது.
இதையொட்டி சபரிமலை அய்யப்பன் கோவில் புதிய மேல்சாந்தியாக எர்ணாகுளம் மூவாற்றுப்புழையை சேர்ந்த பி.என்.மகேஷ் தேர்வு செய்யப்பட்டார்.
நவம்பர் மாதம் 16-ந் தேதி சபரிமலை சன்னிதானத்தில் நடைபெறும் சிறப்பு பூஜையின்போது தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மந்திரம் சொல்லி புதிய மேல்சாந்தி பொறுப்பேற்று கொள்வார். இவரது பணிக்காலம் ஒரு வருடம் ஆகும்.