< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
மேகாலயா ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக எஸ்.வைத்தியநாதன் பதவியேற்பு
|11 Feb 2024 4:11 PM IST
எஸ்.வைத்தியநாதனுக்கு மேகாலயா கவர்னர் பாகு சவுகான் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
சில்லாங்,
மேகாலயா ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக இருந்த சஞ்ஜிப் பானர்ஜி ஓய்வு பெற்றதையடுத்து, அந்த பதவிக்கு சென்னை ஐகோர்ட்டு நீதிபதி எஸ்.வைத்தியநாதனை நியமனம் செய்ய கொலீஜியம் பரிந்துரை செய்தது. இந்த பரிந்துரையின் அடிப்படையில் மேகாலயா ஐகோர்ட்டு நீதிபதியாக எஸ்.வைத்தியநாதன் நியமனம் செய்யப்பட்டார்.
இந்த நிலையில், சில்லாங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மேகாலயா ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக எஸ்.வைத்தியநாதன் பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு அம்மாநில கவர்னர் பாகு சவுகான் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.