< Back
தேசிய செய்திகள்
பீகாரில் உள்ள மகா போதி கோவிலுக்குள் மதுபாட்டிலுடன் நுழைய முயன்ற ரஷியாவைச் சேர்ந்த நபர் சிறையில் அடைப்பு

கோப்புப்படம்

தேசிய செய்திகள்

பீகாரில் உள்ள மகா போதி கோவிலுக்குள் மதுபாட்டிலுடன் நுழைய முயன்ற ரஷியாவைச் சேர்ந்த நபர் சிறையில் அடைப்பு

தினத்தந்தி
|
21 Jan 2023 3:53 PM IST

பீகாரில் உள்ள மகா போதி கோவிலுக்குள் மதுபாட்டிலுடன் நுழைய முயன்ற ரஷியாவைச் சேர்ந்த நபர், சிறையில் அடைக்கப்பட்டார்.

கயா,

பீகாரில் மதுவிலக்கு அமலில் உள்ளது. இந்த நிலையில் பீகாரில் உள்ள மகா போதி கோவிலுக்கு சிறிய மதுபாட்டிலை எடுத்துச் சென்ற ரஷியாவைச் சேர்ந்த நபர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து போத்கயா துணைக் காவல் கண்காணிப்பாளர் அஜய் குமார் கூறுகையில், மகா போதி கோவில் வளாகத்தில் 10 மி.லி ஓட்கா பாட்டிலுடன் ரஷியாவைச் சேர்ந்த நபர் ஒருவர் பிடிபட்டார்.

கோவில் வளாகத்தில் பலத்த பாதுகாப்பு உள்ளது. பார்வையாளர்கள் சோதனைக்குப் பிறகே உள்ளே நுழைய அனுமதிக்கப்படுகிறார்கள். இந்த நிலையில் அவரிடம் இருந்து பாட்டிலை கண்டுபிடித்தபோது, அவர் சில தாந்த்ரீக சடங்குகளைச் செய்ய விரும்புவதாகக் கூறினார்.

ஏறக்குறைய ஏழு ஆண்டுகளாக நடைமுறையில் உள்ள கடுமையான தடைச் சட்டத்தைக் கருத்தில் கொண்டு, அவர் அதை மீறியதாக குற்றம் சாட்டப்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். கோர்ட்டு அவரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளது என்று அவர் கூறினார்.

தற்போது அந்த நபர் கயாவில் உள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

மேலும் செய்திகள்