< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவு
|10 Jun 2022 10:03 AM IST
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 8 காசுகள் குறைந்து 77 ரூபாய் 82 காசுகளாக உள்ளது.
மும்பை,
இன்றைய ஆரம்ப வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு எதிராக ரூபாயின் மதிப்பு 8 காசுகள் குறைந்து 77.82 ஆக உள்ளது.
வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில், அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் 6 பைசா குறைந்ததால் 77.74 ஆக தொடங்கியது.
இதேபோன்று மும்பை பங்கு சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியபொழுது சென்செக்ஸ் 597.2 புள்ளிகள் சாிந்து 54,723.08 ஆகவும், நிஃப்டி 176.30 புள்ளிகள் சரிந்து 16,301.80 ஆகவும் இருந்தது.