< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 12 காசுகள் சரிவு
|2 Jun 2022 10:42 AM IST
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 12 காசுகள் சரிந்து 77 ரூபாய் 62 காசுகளாக உள்ளது.
மும்பை,
இன்றைய ஆரம்ப வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு எதிராக ரூபாயின் மதிப்பு 12 காசுகள் சரிந்து 77.62 ஆக உள்ளது. வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில், அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் 12 பைசா சரிந்ததால் 77.62 ஆக தொடங்கியது.
புதனன்று, அமெரிக்க நாணயத்திற்கு எதிராக இந்திய ரூபாயின் மதிப்பு 21 பைசா உயர்ந்து 77.50 ஆக இருந்தது. இது தற்போது மேலும் அதிகரித்து 77 ரூபாய் 62 காசுகளாக உள்ளது.
இதற்கிடையில், இன்று பங்குச் சந்தைகள் சரிவுடன் துவங்கின. இரண்டு முக்கிய பங்கு குறியீடுகளும் ஏற்ற இறக்கத்தில் மாறிக்கொண்டிருந்தன. சென்செக்ஸ் 0.004 சதவீதம் அல்லது 2.57 புள்ளிகள் உயர்ந்து 55,383.74 ஆகவும், நிஃப்டி 0.11 சதவீதம் அல்லது 18.75 புள்ளிகள் சரிந்து 16,504.00 ஆகவும் இருந்தது.