< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
ராஜ்புத் விவகாரம்: மீண்டும் மன்னிப்பு கோரினார் - மத்திய மந்திரி பர்ஷோத்தம் ரூபாலா
|8 May 2024 7:40 PM IST
ஆங்கிலேயர்களுக்கு பெண் கொடுக்கும் அளவிற்கு ராஜ்புத் மக்கள் நெருக்கமாக இருந்ததாக ரூபாலாவின் கருத்து சர்ச்சையானது.
புதுடெல்லி,
மக்களவை தேர்தலையொட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட் தொகுதி பா.ஜனதா வேட்பாளரும், மத்திய மந்திரியுமான பர்ஷோத்தம் ரூபாலா, சமீபத்தில் பேசுகையில், ராஜபுத்திர சமூகத்தினர் , ஆங்கிலேயர்களுக்கு பெண் கொடுக்கும் அளவிற்கு அவர்களுடன் நெருக்கம் காட்டினர் என பேசினார். இவரது பேச்சுக்கு குஜராத்தில் வசிக்கும் ராஜபுத்திர சமூகத்தினர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்நிலையில் இவரது பேச்சுக்கு ராஜஸ்தான், உத்திர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் வசிக்கும் ராஜபுத்திர சமூகத்தினரிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து தாம் பேசிய கருத்தை திரும்ப பெறுவதாக அறிவித்து மீண்டும் மன்னிப்பு கோரினார். தனது வாழ்க்கையில் மிகவும் கடினமான நேரம் இது என ரூபாலா கருத்து தெரிவித்துள்ளார்.