< Back
தேசிய செய்திகள்

தேசிய செய்திகள்
'நாட்டுக்கு பங்களிக்கக்கூடிய தன்னார்வலர்களை ஆர்.எஸ்.எஸ். உருவாக்குகிறது' - மோகன் பகவத் பேச்சு

7 Jan 2023 8:47 PM IST
ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்த ஒவ்வொரு தனிநபரும், தங்களால் முடிந்த சமூக பணிகளை செய்து வருவதாக மோகன் பகவத் குறிப்பிட்டார்.
பனாஜி,
கோவாவில் உள்ள பனாஜி நகரில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்த ஒவ்வொரு தனிநபரும், தங்களால் முடிந்த சமூக பணிகளை செய்து வருவதாக குறிப்பிட்டார்.
தேவைப்படும் இடங்களில் முன்னின்று களப்பணியாற்ற ஆர்.எஸ்.எஸ். இயக்கம் அவர்களுக்கு சொல்லிக் கொடுத்திருப்பதாகவும், இதனால் அந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் சமூகத்தில் முன்னனியில் திகழ்வதாகவும் மோகன் பகவத் கூறினார்.
மேலும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு பல துறைகளில் நாட்டுக்கு பங்களிக்கக்கூடிய தன்னார்வலர்களை உருவாக்குகிறது என்றும், ஆனால் அவர்கள் மூலம் எந்த அழுத்தத்தையும் ஏற்படுத்தும் குழுக்களை உருவாக்க முயலவில்லை என்றும் மோகன் பகவத் தெரிவித்தார்.