< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
பிரமாண்ட அணிவகுப்புடன் ஆர்எஸ்எஸ் நடத்திய விஜயதசமி விழா- சங்கர் மகாதேவன் பங்கேற்பு
|24 Oct 2023 2:06 PM IST
நாக்பூரில் பிரமாண்ட அணிவகுப்புடன் ஆர்.எஸ்.எஸ். சார்பில் விஜயதசமி விழா நடைபெற்றது.
நாக்பூர்:
மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் ஆர்எஸ்எஸ் சார்பில் ஆண்டுதோறும் விஜயதசமி விழா நடத்தப்படுகிறது. அவ்வகையில் இன்று பிரமாண்ட அணிவகுப்புடன் விஜயதசமி விழா நடைபெற்றது.
விழாவில் பாடகர்-இசையமைப்பாளர் சங்கர் மகாதேவன் தலைமை விருந்தினராக கலந்து கொண்டார். ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், மத்திய மந்திரி நிதின் கட்காரி, மகாராஷ்டிர துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
ஆர்எஸ்எஸ் நிறுவனர் கேபி ஹெட்கேவார் சிலைக்கு ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், சங்கர் மகாதேவன் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.